சினேகனுக்கு புதிய பொறுப்பு

சினேகனுக்கு புதிய பொறுப்பு

1 mins read

சென்னை: மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், கட்சியில் பல்வேறு மாற்றங்களைச் செய்து 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆறு பொதுச் செயலாளர்கள், 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் கட்சியின் கட்டமைப்பை மீண்டும் மாற்றியமைத்தார். அதில் நியமிக்கப்படாமல் விடுபட்டிருந்த மற்ற பொறுப்புகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணிச் செயலாளராக கவிஞரும் நடிகருமான சினேகனை கமல்ஹாசன் நியமித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த சினேகன், "என் மீது நம்பிக்கை கொண்டு பொறுப்பான மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்கிய நம்மவர் அவர்களுக்கு நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.