ஸ்டாலின்: வெட்கக்கேடானது

ஸ்டாலின்: வெட்கக்கேடானது

2 mins read

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வர்கள் மீதான குண்டர் சட்டத்தை வெள்ளிக்கிழமை நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு ஆளும் அதிமுக அரசின் மெத்தனப்ேபாக்கே காரணம் என்று கூறியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இச்செயல் வெட்கக்கேடானது என்று குறிப் பிட்டுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில்,"அதிமுக அரசின் திட்ட மிட்ட அலட்சியத்தாலும் பாராமுகத் தாலும் தமிழகத்தையே அதிர்ச்சிக் கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்தாகியிருக்கிறது.

இளம்பெண்களின் வாழ்வினை, இரக்கமனம் சிறிதுமின்றிச் சூறை யாடிய இந்த இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, சாதாரணமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகளைக் கூட அதிமுக அரசின் மறைமுகக் கட்டளைப்படி, காவல்துறை அதி காரிகள் கடைப்பிடிக்காமல் கை விட்டிருப்பது வேதனை தருகிறது.

ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை சட்ட நடைமுறையைக்கூட வேண்டு மென்றே திட்டமிட்டு காவல்துறை யாருக்கோ உதவிடும் நோக்கில் கோட்டை விட்டுள்ளது.

அந்த வகையில் குண்டர் சட்டம் ரத்தானதற்கு அதிமுக அரசு துணை போயிருப்பது வருத்தமளிக் கிறது; இது மிகவும் வெட்கக் கேடானது.

அதிகார வர்க்கத்தின் அழுத்தத் திற்கு ஆட்படாமல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு நடத்தப்பட்டு இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த, கழி சடைக் கலாசாரக் கயவர்கள் அனைவரும், சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப் பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.