'மதம் மாறி மாறி இரு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர் கைது

'மதம் மாறி மாறி இரு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர் கைது

1 mins read
bea49ac2-2f80-4d64-9b55-564c27f3829b
-

நாகர்கோவில்: இந்துவாக இருந்து முஸ்லிமாகவும் அதன்பின்னர் கிறிஸ்துவர் என மதங்கள் மாறி மாறி இரு திருமணங்களைச் செய்த பொறியாளர் கைதானார்.

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதுாரைச் சேர்ந்தவர் தங்கபொன்சன், 36. இவர் மும்பையில் மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்தபோது சக ஊழியரான பாத்திமா, 39, என்பவரை 2010ல் திருமணம் செய்தார். முகம்மது அலி ஷேக் என பெயரை மாற்றி, மதமும் மாறினார். அவர்களுக்கு இரு மகன்கள்.

கடந்த 2016ல் வெளிநாடு செல்வதாகக் கூறி மனைவி, பிள்ளைகளை மும்பையில் தங்க வைத்துவிட்டு அவர் செண்பகராமன்புதுாருக்குச் சென்றார். அங்கு ஷகிலா என்ற கிறிஸ்துவ பெண்ணைத் திருமணம் செய்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பார்த்த பாத்திமா கணவர் மீது போலில் புகார் அளித்தார்.