விளம்பரம் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்

விளம்பரம் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்

2 mins read
67eb304c-8911-4b0c-b989-3d492284eda1
சமூக விழிப்புணர்வு பற்றிய விளம்பரம் தயாரிக்கும் போட்டியில் முதல் நிலையில் வந்த பூன் லே உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் அவர்களின் ஆசிரியர் திரு ரமேஷ் ராஜா மற்றும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு வடிவழகன். படம்: திமத்தி டேவிட் -

விளம்பரம் என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு சாதனம். சொல்ல விரும்பும் கருத்து, பார்ப்போரைச் சென்றடைவதுடன் சிந்திக்கவும் தூண்டவேண்டும். அவ்வாறு அண்மையில் சில உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விளம்பரம் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இறங்கினர்.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களைத் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியை ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் நடந்தேறியது. 14 பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 60 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.

மாணவர்களைப் போட்டிக்காக தயார்ப்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் 15, 16, 17ஆம் தேதிகளில் பயிலரங்கு நடத்தப்பட்டது. ஊடகத் துறையில் உள்ள திரு சலிம் ஹாடி, பயிலரங்கை வழிநடத்தினார்.

மென்பொருள்கள் மூலம் விளம்பரங்கள் தயாரிப்பதற்கான முக்கிய கூறுகளும் அம்சங்களும் கற்றுத் தரப்பட்டன. கைபேசியில் காணொளிகளைப் பதிவு செய்யும் தொழில்நுட்ப நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டனர்.

மாணவர்கள் சமூக விழிப்புணர்வு சார்ந்த கருப்பொருட்களைக் கலந்தாலோசித்து பின்னர் கருப்பொருள் குறித்துத் திட்டமிட்டு அதை விளம்பர வடிவில் கைபேசியிலேயே காணொளியாகப் பதிவு செய்தனர்.

மொத்தத்தில் மாணவர்கள் சமூக பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கு இப்போட்டி ஒரு நல்ல தளமாக அமைந்தது.

தொழில்நுட்பத்தின் துணையுடன் சமூக சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் மாணவர்கள் விளம்பரம் தயாரித்தனர். தமிழ்மொழியில் தன்னம்பிக்கையுடன் பேசவும் இப்போட்டி ஒரு நல்ல வாய்ப்பு அளித்தது.

கல்-விப் பய-ணம் பிள்-ளை-க-ளுக்-குச் சுமை-யாக இல்-லா-மல் சுக-மாக இருக்க வேண்-டும் என்ற கருத்தைத் தங்-க-ளின் விளம்-ப-ரத்-தின்-வழி எடுத்-து-ரைத்த பூன் லே உயர்-நி-லைப்-பள்ளி வெற்றி வாகை சூடி-யது.

சென்ற மாதம் 18ஆம் தேதி-யன்று விளம்-ப-ரப் போட்-டி-யின் பரி-ச-ளிப்பு விழா நடந்தேறியது. இதில் சிறப்பு விருந்-தி-ன-ரா-கத் தொலைக்-காட்-சிப் புகழ் திரு வடி-வ-ழ-கன் கலந்-து-கொண்டு சிறப்-பித்-தார்.