கண்டெடுத்த ரூ.302,000 பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

கண்டெடுத்த ரூ.302,000 பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

1 mins read
6738add8-8320-44ce-b4cd-817133c2f97d
சாலையில் கிடந்த சுமார் ரூ.3 லட்சம் பணத்தை யாருக்கும் தெரியாமல் அபகரித்து விடுவோம் என்று நினைக்காமல் அதை  தொலைத்தவரிடமே திரும்பக் கொடுத்துவிடும்படி கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத் துள்ளார் 58 வயது மதன்ராஜ் ஜெயின்.  -

தாம்பரம்: மேற்கு தாம்பரத்தில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் ரூ.3 லட்சம் பணத்தை யாருக்கும் தெரியாமல் அபகரித்து விடுவோம் என்று நினைக்காமல் அதை தொலைத்தவரிடமே திரும்பக் கொடுத்துவிடும்படி கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத் துள்ளார் 58 வயது மதன்ராஜ் ஜெயின்.

அவரது நேர்மையை சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அ.கா.விஸ்வநாதன் மனமுவந்து பாராட்டி உள்ள நிலையில், பொது மக்களும் அவரை மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.

சென்னை மேற்கு தாம்பரம், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் மதன்ராஜ் ஜெயின், 58. இவர் அதே பகுதியில் ஆதிநாத் என்ற பெயரில் மோட்டாா் கடை நடத்தி வருகிறாா். கடந்த அக்டோபா் 31ஆம் தேதி மதியம் அவர் தனது கடைக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது சாலையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்ததை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் இருந்த ரூ.302,000 பணத்தை தாம்பரம் காவல் உதவி ஆணையா் அசோகனிடம் ஒப்படைத்தாா்.

இந்நிலையில், மதன்ராஜ் ஜெயினின் நோ்மையை சென்னை பெருநகர காவல் ஆணையா் அ.கா.விஸ்வநாதன் பாராட்டினாா்.

இதேபோல் விருகம்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் பயணம் செய்த விஜயலட்சுமி, 46, தவறவிட்ட 25 சவரன் நகைகள்அடங்கிய பையை அந்தப் பயணியிடம் தியாகராய நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் உதயகுமாா் பத்திரமாக ஒப்படைத்தாா். அவரும் காவல் ஆணை யரால் பாராட்டப்பட்டார்.