தஞ்சை: வள்ளுவரைப் போற்றும் வகையில் தஞ்சை பிள்ளையார்பட்டி என்னும் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை மீது சாணத்தை வீசி அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள குறும்புக்காரர்களை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அத்துடன் , திருவள்ளுவரின் சிலையின் கண்களில் கறுப்பு நிற சாயமும் பூசப்்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சாணம் பூசிய குறும்புக்கார நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
திருவள்ளுவரின் மீதும் திருக்குறள் மீதும் உலகெங்கும் மரியாதை உள்ளது. எந்த சூழ்நிலை யிலும் யாரும் ஒருபோதும் வள்ளுவரை அவமதித்ததில்லை. ஆனால் தற்போது சாணம் எறியப்பட்டிருக்கும் இந்நிகழ்வு பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது
உலக பொதுமறையான திருக்கு றளை இயற்றிய திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலையின் முகம், கழுத்துப் பகுதிகளில் சாணி வீசப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டில் மேற்கொண்ட பயணத்தின் போது திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழை பெருமைப்படுத்தும் வகையில் இந்தியர்கள் மத்தியில் பேசிய நிலையில், திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது தஞ்சாவூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

