சென்னை: ஆதம்பாக்கத்தில் போதைப் பொருட்களை விற்பனை செய்த கும்பலை காட்டி கொடுத்த இளைஞரின் தங்கைக்கும் தம்பிக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் போதை மாத்திரைகளையும் கஞ்சா போதைப் பொருளையும் விற்பனை செய்து வரும் கும்பல் குறித்து பவுல்ராஜ் என்ற இளைஞர் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் பவுல்ராஜை தேடிக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றபோது, வீட்டில் பவுல்ராஜ் இல்லாததால் அங்கிருந்த பவுல்ராஜின் தங்கை செவ்வந்தி, தம்பி தனுஷ் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இனியும் இப்படி தொடர்ந்தால் குடும்பத்தை உயிரோடு புதைத்து விடுவோம் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளது.

