நூல் சேலையில் 3டி வடிவமைப்பில் மோடி- ஜின்பிங் சந்திப்பு தத்ரூபம்

நூல் சேலையில் 3டி வடிவமைப்பில் மோடி- ஜின்பிங் சந்திப்பு தத்ரூபம்

1 mins read
9b983b44-bf5d-4ca6-8f34-092f5e5421d5
-

பரமக்குடி: மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12ஆம் தேதி களில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தை பரமக்குடி நெசவாளர்கள் நூல் சேலையில் 3டி முறையில் நெய்து வரவேற்பைப் பெற்றுள்ள னர். இதுகுறித்து நெசவாளர் சரவணன் கூறுகையில், "நெசவாளர்கள் பெரும்பாலும் பட்டுச் சேலைகளில்தான் புகைப்படங்களுடன் கூடிய சேலைகளை தயாரிக்கின்றனர். நூல் சேலையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் மாமல்லபுரம் சந்திப்பை வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சேலையை நேராகப் பார்த்தால் இருநாட்டுத் தலைவர்களும் சேலையின் பக்கவாட்டுப் பகுதியில் மாமல்ல புரத்தில் உள்ள சிற்பங்களும் தெரியும் வகையில் 3டி முறையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார். படம்: ஊடகம்