வங்கக் கடலில் உருவாகும் புயல்

வங்கக் கடலில் உருவாகும் புயல்

1 mins read

சென்னை: "மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்தது.

'புல் புல்' என்று பெயரிடப்பட்டு உள்ள இந்தப் புயல் ஒடிஷாவை நோக்கி நகர்ந்து செல்லும்.

இதனால் தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதே சமயம், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை நிலையம் கூறியது.