வேலுார்: வேலுார் சிறையில் 10வது நாளாக முருகன், நளினி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி, வேலுார் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நேற்று தகவல் தெரிவித்த சிறைத்துறை அதிகாரிகள், நளினி 10வது நாளாகவும் முருகன் 9வது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மருத்துவர் அறிவுறுத்தலின்படி இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது என்று கூறினர்.

