அர்ஜூன் சம்பத் கைது

அர்ஜூன் சம்பத் கைது

1 mins read
59345992-4945-461a-97d9-b4484a11f3f6
அனுமதியின்றி திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்த அர்ஜூன் சம்பத்தை வல்லம் காவல்துறையினர் கைது செய்தனர். படம்: ஊடகம் -

தஞ்சை: தஞ்சையில் அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு நேற்று காலை காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலையின் கை, உடம்பில் விபூதி பூசி, கழுத்தில் ருத்திராட்சை மாலையும் அணிவித்த அவர் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டார்.

தஞ்சை அருகே இருதினங்க ளுக்கு முன் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி, கண்களுக்கு கறுப்பு சாயம் பூசி அவமதிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து, ஆங்காங்கே மாணவர்கள் கறுப்புத் துணியால் கண்களைக் கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.