பொது இடங்களில் மதுப் புட்டிகளை வீசினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

பொது இடங்களில் மதுப் புட்டிகளை வீசினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

1 mins read

நீலகிரி: காலி மதுப் புட்டிகளை பொது இடங்களில் வீசிச் செல்பவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நீலகிரியில் 52 அரசு மதுபானக் கடைகள், 32 அரசு மதுக்கூடங்கள் தவிர, பல தனியார் மதுக்கூடங்களும் உள்ளன. இந்நிலையில் மது அருந்துபவர்கள் காலி மதுப் புட்டிகளை வனப்பகுதிகள், விளைநிலங்கள், சாலையோரங்கள் எனப் பல இடங்களிலும் வீசிச் செல்வது அதிகரித்தபடி இருக்கிறது. இத்தகைய அலட்சியப் போக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுப் புட்டிகளை இவ்வாறு பொது இடங்களில் வீசிச் செல்வது கண்டறியப்பட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.