திருச்சி: திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவில் குறித்து அவதூறு பரப்பிய 56 வயது ஆடவர் கைதானார். ரங்கராஜன் என்ற அந்த ஆடவர் திருவரங்கக் கோவிலில் உள்ள நம்பெருமாள் சிலை மாற்றப்பட்டதாகவும், மேலும் பல முறைகேடுகள் நடப்பதாகவும் புகார் எழுப்பியதுடன், சில காணொளிப் பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதையடுத்து கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் குறித்து இவர் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் போலிசில் புகார் அளிக்க, அதன் பேரில் போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவரங்கக் கோவில் குறித்து அவதூறு பரப்பியதாக ஆடவர் கைது
1 mins read
திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறிய 56 வயது ரங்கராஜனை அவதூறு பரப்புகிறார் என்ற புகாரின்பேரில் போலிசார் கைது செய்துள்ளனர். படம்: ஊடகம் -

