புதுடெல்லி: இந்தியாவில் நீதிமன்றம், போலிஸ், சட்ட உதவி போன்றவற்றில் மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கச் செய்வதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதில் முதலிடத்தை மகாராஷ்டிரா மாநிலமும் 2வது இடத்தை கேரளாவும் பெற்றுள்ளன. 'இந்திய நீதி அறிக்கை' என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் ஆய்வு நடத்தி புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் தமிழகத்துக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒரு கோடிக்கும் குறைவாக மக்கள் தொகை உள்ள மாநிலங்களைப் பொறுத்தவரை கோவா முதலிடத்திலும் சிக்கிம் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பல மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி அவற்றை அறிக்கை வரிசைப்படுத்தியுள்ளது.

