சிறுமிகளுக்கு உதவ புதிய திட்டம் 'தோழி'

சிறுமிகளுக்கு உதவ புதிய திட்டம் 'தோழி'

1 mins read

சென்னை: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு ஆளான சிறுமிகளுக்கு மனதளவிலும் உளவியல் மற்றும் சட்ட ரீதியாகவும் ஆலோசனைகளை வழங்கவும் உதவி புரியவும் 'தோழி' என்ற புதிய திட்டத்தை சென்னை போலிஸ் நேற்று தொடங்கியது. தோழி அமைப்பிற்காகச் செயல்பட 70 பெண் போலிசார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களை அணுகும் முறை குறித்து இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பிறகு இந்தப் பெண் போலிசாருக்கு நிர்பயா முத்திரையும் இளஞ்சிவப்பு வண்ணச் சீருடையும் வழங்கப்பட்டது.