திருச்சி சிறையில் வெளிநாட்டு கைதிகள் போராட்டம்

திருச்சி சிறையில் வெளிநாட்டு கைதிகள் போராட்டம்

1 mins read

இலங்கை, பங்ளாதேஷ், பல்கேரியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 70 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தண்டனைக் காலம் முடிந்தும் தங்களைத் தாயகத்துக்கு அனுப்பவில்லை என்று சொல்லி 46 கைதிகள் பேரராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 20 பேர் விஷம் குடித்து வாந்தி எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

முகாமில் கைதிகளுக்கு வி‌ஷம் எப்படி கிடைத்தது, அவர்கள் எந்த வகையான நச்சு சாப்பிட்டனர் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. படம்:தமிழக ஊடகம்