100 ஏரிகளுக்கு மேட்டூர் அணை உபரி நீர்: ரூ.615 கோடி திட்டம்

சேலம்: மேட்டூர் அணையின் உபரி நீரை 4 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்த 615 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

முதல்வர் பழனிசாமி, சேலம் கொங்கனாபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் 5,723 பயனாளிகளுக்கு 25 கோடியே 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 18 கோடியே 89 லட்சம் மதிப்பிலான 43 பணிகளைத் தொடங்கிவைத்தார். 

நிகழ்ச்சியில் 112 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 116 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், 24 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடியைத் திறந்துவைத்து மேட்டூர் உபரி நீர் திட்டம் பற்றி அறிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கண்டதுமே காதல் கொண்டு திருமணம் செய்துகொண்ட மாற்றுத் திறனாளிகளான ராமராஜன்- தேவி. படம்: தமிழக ஊடகம்

12 Nov 2019

கல்யாண வீட்டில் கண்டதும் காதல்: சைகை மொழியில் பேசி உடனே திருமணம்