டிசம்பர் முடிவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாத இறுதியில் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் மாநக ராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாக தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர்.

கடைசியாக தனி அதிகாரிகள் பதவிக் காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி இப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர், டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடக்கக் கூடும் என்று தெரிகிறது.