ரூ.4,929 கோடி தமிழ்நாட்டு சாலைத் திட்டங்கள் ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் இடம்பெறவிருந்த நான்கு சாலைத் திட்டங்களை ரத்து செய்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ. 4,929 கோடி. சாலை விரிவாக்கத்தை அமைப்பதற்குத் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்தி அதை ஆணையத்திடம் ஒப் படைக்க தமிழக அரசு தாமதித்து வருவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம்-புதுச்சேரி பாதையில் இடம்பெறவிருந்த நான்கு தட விரிவாக்கம், புதுச்சேரி-பூண்டியான்குப்பம் நெடுஞ்சாலை, பூண்டியான்குப்பம்-சாத்தநாதபுரம் விரைவுச்சாலை பகுதி, விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையை நான்கு தட சாலையாக விரிவுபடுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கான திட்டங்கள் ரத்தாகி இருப்பதாக இந்த ஆணையத்தின் தலைவர் நாகேந்திரநாத் சிங்கா கூறி இருக்கிறார்.

விழுப்புரம்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி நான்குதட இரு வழிச் சாலையாக அதை மாற்றுவதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டன. இப்படிச் செய்வதன் மூலம் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் போன்ற பெரிய நகர்களுக்குச் சென்றுவர தேவைப்படும் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கலாம்.

அதோடு மட்டுமின்றி, அந்த வழித்தடம் நெடுகிலும் தொழில் பெருக்கத்திற்கும் இந்தச் சாலை விரிவாக்கம் பயனளிக்கும்.

ஆனால் இந்த திட்டம் உட்பட நான்கு சாலை விரிவாக்கத் திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தலைமையகத்தில் இருந்து தங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் கடிதம் வந்தது என்று சென்னையைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த உத்தரவுகள் 2019 மே முதல் நடப்புக்கு வரும் என்றும் கூறப்பட்டு உள்ளது. குத்தகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களிடம் நிலம் ஒப்படைக்கப்படாததால் தனக்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

குத்தகை நிபந்தனைகளின்படி சாலை விரிவாக்கத்திற்கான நிலத்தை, உடன்பாடு கையெழுத்திடப்பட்ட 2018 மார்ச் மாதத்திற்குப் பிறகு ஆறு மாத காலத்திற்குள் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் நிலத்தை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடியவில்லை என்றது ஆணையம்.

இதைப்போலவே மீன்சுருட்டி- சிதம்பரம் நகர்களுக்கு இடைப்பட்ட சாலையில் இரண்டு தடங்களைக் கூட்டுவதற்கு வகைசெய்யும் திட்டமும் ரத்தாகிவிட்டது.

இருந்தாலும் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் நிலத்தை ஒப்படைக்கப்போவதாக தமிழக அரசு தெரவித்து உள்ளதாக அந்த ஆணைய அதிகாரி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!