கஞ்சா சாந்து தயாரித்தபோது தீ மூண்டது: 2 பேர் பாதிப்பு

திருவேற்காடு: திருவேற்காடு அருகில் விடுதி ஒன்றில் போதை தரும் ஒருவகை கஞ்சா சாந்து தயாரிக்க ரேஸ் ராஜா, விக்னேஷ், மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகிய ஐந்து பேர் முயன்றனர். 

அப்போது புகை மூண்டது. ஒருவர் சிகரெட்டை பற்றவைத்தபோது புகை தீப்பிடித்து எரிந்தது. 

இதனால் பாதிக்கப்பட்ட ரேஸ் ராஜாவும், விக்னேஷும் ஆபத்தான  நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதர மூவரைப் பிடித்து போலிஸ் விசாரித்து வருகிறது. 

விடுதியில் கஞ்சா போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட இந்த விவகாரம் பெரும் பிரச்சினையைக் கிளப்பிவிட்டுள்ளது. 

போலிஸ் பெரிய அளவில் விசாரணையைத்  தொடங்கி இருக்கிறது.