தமிழகத்தில் 10,000 மருத்துவர்களுக்கு வேலையில்லை

சென்னை: தமிழகத்தில் 10,000 மருத்துவர்கள் வேலை இல்லாமல் இருப்பதாகத் தமிழ்நாடு மருத்துவக் கழகத் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். “தொடர்ந்து மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே சென்றால் இதுபோல் வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை தான் ஏற்படும்,” என்றும் சுரேந்திரன் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவக் கழகத் தின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கழக அலு வலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பதிவு செய்த மருத்துவர்கள் உள்ளனர்.

“இவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரம் மருத்துவர்கள் தமிழகத்தில் பணியாற்றுகிறார்கள்.

“உலக சுகாதார நிறுவனம் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் எனும் விகித அளவில் இருக்கவேண்டும் என்று வரையறை செய்துள்ளது.

“தமிழகத்தைப் பொறுத்தவரை 719 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதாச்சாரம் இருந்து வருகிறது.

“மருத்துவச் சேவைக்கு வரு பவர்களின் எண்ணிக்கை அதி கரித்துக்கொண்டே வருகிறது.

“இதே நிலை தொடர்ந்தால் வருகிற 10 ஆண்டுகளில் 1,000 பேருக்கு 2½ டாக்டர் என்ற விகி தாச்சாரம் இருந்து வரும்.

“இது உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கும் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம்.

“தமிழகத்தில் சுமார் 10,000 மருத்துவர்கள் இப்போது வேலை இன்றி இருக்கும் நிலையில், மேலும் மேலும் தமிழக மருத்துவர்க ளின் எண்ணிக்கையை அதிக ரிப்பதற்குப் பதிலாக மருத்துவ மனைகள், மருத்துவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

“உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையின்படி மருத்துவர்கள் எண்ணிக்கையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது.

“ஆண்டுக்கு 4,500 மருத்துவர் கள் படித்து முடிக்கிறார்கள். முதுகலை படிப்பதற்கு மருத்துவ இடங்கள் மிகக்குறைவாக இருக்கின்றன.

“அதனால் அனைவரும் குறிப்பிட்ட நிபுணத்துவம் பெறாத மருத்துவர்களாக இருப்பதால் வேலைவாய்ப்பு பெறமுடியாத நிலை உள்ளது.

“அதனால் முதுகலை இடங்களை அதிகரிக்கும் தேைவ குறித்தும் பரிந்துரை செய்துள்ளோம்.

“இணையத்தளத்தில் மருத்துவர்கள் விளம்பரம் செய்யக்கூடாது. இதையும் மீறி தவறு செய்த மருத்து வர்களுக்கு எச்சரிக்கை, அபராதம், மருத்துவத் தொழில் செய்ய தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!