ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் 

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள் அச்சிடப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன்மூலம் ஒவ்வோர் இல்லங்களிலும் திருக்குறளைக் கொண்டு சேர்க்க முடியும் என்றும் இதற்காக முதல்வரின் ஒப்பு தலைப் பெற உள்ளதாகவும் அவர் கூறினார்.