திமுக நிர்வாகியிடம் போலிசார் விசாரணை

திமுக நிர்வாகியிடம் போலிசார் விசாரணை

1 mins read
d8da488b-33ca-43a2-9c95-b595ddc4042a
-

சேலம்: சேலம் அருகே திமுக நிர்வாகி விஜயகுமாரை திடீரென கியூ பிரிவு போலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கேரளத்தில் சுடப்பட்ட மாவோயிஸ்ட் ஒருவரின் கைபேசியில் விஜயகுமாரின் கைபேசி எண் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.

அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த விஜயகுமார் திமுகவில் ஒன்றியச் செயலாளராக உள்ளார். வீட்டில் இருந்த அவரை திடீரென காரில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் எந்த தகவலும் கூறாமல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கட்சித் தொண்டர்களுடன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.