உயிர் துறந்த மாணவியின் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

உயிர் துறந்த மாணவியின் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

1 mins read

சென்னை: கேரள மாணவி பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமை அன்று சென்னை ஐஐடி விடுதி அறையில் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலிசுக்கு மாற்றியுள்ளதாக மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவித்தார். தான் உயிரை விடுவதற்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனும் மேலும் இரு பேராசிரியர்களும்தான் காரணம் என மாணவி கைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளார்.

அந்த செல்போன் பதிவில், மேலும் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.