ப. சிதம்பரத்துக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில்  அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

அந்த வழக்கில், தனக்குப் பிணை அனுமதிக்கும்படி கேட்டு ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், பொருளியல் குற்றத்தைத் தீவிரமாக கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டது.  

முன்னதாக, ப.சிதம்பரத்திற்கு சிபிஐ வழக்கில் பிணை  வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் பிணை மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் கடந்த அக்டோபா் 16ஆம் தேதி கைதான ப.சிதம்பரம் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.