சென்னை: வாடகை ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்காக அளிக்கப் பட்ட கால அவகாசத்தை தமிழக அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு வாடகை வீட்டு வசதி சட்டத்தின் கீழ் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாடகை வீட்டு வசதி சட்டம் எனப்படும் நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் பொறுப்புகள், உரிமைகள் சட்டம், 2017ல் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான விதிமுறைகள் 2019 பிப்ரவரி 22ஆம் தேதி அமலுக்கு வந்தன.
இந்த சட்ட விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 90 நாட்களுக்குள் வீடு மற்றும் நிலத்தை வாடகைக்கு விடுவோரும் பெறுவோரும் சட்டப்படி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
நிர்வாக நடைமுறைகள் காரணமாக இதை நடைமுறைப் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.எனவே ஒப்பந்தம் மேற்கொள்வதற் கான அவகாசத்தை 210 நாட்களாக நீட்டித்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
தற்போது, இந்த அவ காசத்தையும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனால் இச்சட்டத்தின் நான் காவது பிரிவின் உட்பிரிவு இரண்டில் வாடகை ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான அவகாசம் 210 நாட்கள் என்பது 575 நாட்களாக திருத்தப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்துக்கான அவசர சட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்து உள்ளார்.
இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை, தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. இதன்படி வாடகை ஒப்பந்தங்கள் மேற்கொள்ள கூடுதலாக 365 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது.