பக்தையை அறைந்ததாக புகார்: தீட்சிதர் மீது வழக்கு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர்  கோ யில் தீட்சிதர்தர்ஷன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழிபாடு செய்ய வந்த ஒரு மாதை கன்னத்தில் அறைந்ததாக புகார் தெ ரிவிக்கப்பட்டதை அடுத்து

போ லிசார் அவர் மீது வழக்குப் பதிந்தனர் . சாமி கும்பிட வந்த தன்னை , தீட்சிதர் தர் ஷன் அறைந்த

தாக லதா என்ற 51 வயது மாது புகார் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தை ச் சேர்ந்தவரான லதா, நடராஜர் கோ யில் வளாகத்தில் உள்ள முக்குருணி விநாயகர் சன்னதிக்குச் சென்றபோ து அர்ச்சனை தொடர்பாக அவருக்கும் தீட்சிதர் தர்ஷனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனை அடுத்து தீட்சிதர் தன்னைக் கன்னத்தில் அறைந்ததாகவும் அதனால் தான் கீழே

விழுந்துவிட்டதாகவும் லதா போலிசிடம் தாக்கல் செய்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, தீட்சிதர் மீது, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண்

வன்கொ டுமை ச் சட் டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள தீட்சிதரை போ லிசார்  தேடி வருகிறார்கள்.