உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் ஆலோசனை

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி யினர் நேற்று ஆலோசனை நடத்தி யது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், முன்னாள் மாநில தலைவர்கள் இளங்கோவன், கிருஷ்ணசாமி, அகில இந்திய செயலாளர் நடிகை குஷ்பு, எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், வசந்தகுமார், விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் கே. ஆர்.ராமசாமி, விஜயதரணி, மலேசியா பாண்டியன், காளிமுத்து, மாநில நிர்வாகிகள் நாசே ராமச்சந்திரன், தாமோதரன், செல்வம், சிரஞ்சீவி, ராயபுரம் மனோகர், அருள் பெத்தையா, தமிழ்ச்செல்வன், பொன்.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலைச் சந்திப்பது, கூட்டணியில் எத்தனை இடங்களைக் கேட்டுப் பெறுவது, எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.