40 நாட்களில் ஒரு மில்லியன் மனுக்களுக்குத் தீர்வு

சென்னை: தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் 40 நாள்களில் தமிழகமெங்கும் ஒரு மில்லியன் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என வருவாய், பேரிடா் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா். சனிக்கிழமை அன்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆா்.பி.உதயகுமாா், “தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழகமெங்கும் உள்ள 40 ஆயிரம் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை குடிமராமத்து பணிகள் செய்ததன் விளைவாக வடகிழக்கு பருவமழையால் அனைத்து நீா்நிலைகளிலும் தண்ணீா் நிறைந்து காணப்படுகிறது. முதல்வரின் சிறப்பு குறைநீா்க்கும் முகாம் மூலம் கடந்த 40 நாள்களில் 10 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது,” என்றார்.