ராமதாஸ்: இலங்கையில் எது நடக்கக் கூடாதோ அது நடந்துவிட்டது

சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது நடந்துவிட்டது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ அது நடந்து விட்டது. ஆம்.... தமிழினத்தின் எதிரியான கோத்தபய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கை யின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அச்சம் தெரி வித்துள்ளார்.

“2009ஆம் ஆண்டு ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் எவரும் இனி தண்டிக்கப்பட மாட்டார்கள். போர்க் குற்றவாளியான கோத்தபய ராஜபக்சேயே அதிபராக வந்துள்ள நிலையில் எந்தவிதமான போர்க்குற்ற  விசாரணையும் இனி நடக்காது. 

“மொத்தத்தில் இதுவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்கள், இனி 4ஆம் தர குடிமக்களாக நடத்தப்படுவர்.

“தமிழர்களின் எதிரியாக வரித்துக்கொண்டு களமிறங்கிய கோத்தபயவுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சராசரியாக 10% வாக்குகள் கூட கிடைக்க வில்லை; அதேநேரத்தில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 60 முதல் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்து உள்ளன. அதேபோல், தமிழர்களின் நண்பனாக காட்டிக்கொண்ட சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் 80 முதல் 90% வாக்குகளும், மற்ற பகுதிகளில் 40 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. தமிழர்கள் தனித் தீவாகவும், சிங்களர்கள் தனித் தீவாகவும் வாக்களித்துள்ளனர்.

“ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா தமிழர்களின் நலன் காக்கப்படும்; தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கப்படும்; மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதனால் அவருக்கு தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழர் கட்சிகள் ஆதரவு அளித்தன. அதனால் பிரேமதாசா தமிழர் ஆதரவு வேட்பாளராகவே பார்க்கப் பட்டார்.

அதற்கு மாறாக கோத்தபய ராஜபக்சே சிங்கள பேரினவாதத்தின் சின்னமாகவே களமிறங்கினார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே தொடங்கிய இலங்கை பொதுஜன கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டாலும், இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் அவருக்கு ஆதரவு அளித்தது. இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இலங்கை ராணுவம் வலிமைப் படுத்தப்படும்; போர்க்குற்ற விசார ணைகள் அனைத்தும் கைவிடப்படும் என்பன உள்ளிட்ட பிரசாரத்தையே கோத்தபய முன்னெடுத்தார்.

“இத்தகைய சூழலில் இலங் கையில் வாழும் தமிழர்களின் நலன் களைக் காப்பாற்றுவது குறித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்,” என்று ராம தாஸ் தெரிவித்துள்ளார்.