மாணவி உயிர் துறந்த வழக்கு: மூவருக்கு அழைப்பாணை

மாணவி உயிர் துறந்த வழக்கு: மூவருக்கு அழைப்பாணை

2 mins read
739b6431-74b5-4c8c-900d-5be8e689e62f
மாணவி ஃபாத்திமா லத்தீஃப்பின் உயிரிழப்புக்கு காரணமாகக் கூறப்படும் பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் ப்ரெஹ்மே. படம்: ஊடகம் -

சென்னை: சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலைப் பட்டப் படிப்பு படித்து வந்த 18 வயது இளம் மாணவி ஃபாத்திமா லத்தீஃப்் ஐஐடி வளாக விடுதியில் உயிர் துறந்தார்.

தனது உயிர் துறப்புக்கு கார ணம் இவர்கள் தான் என்று அவர் குறிப்பிட்டிருந்த ஐஐடி பேராசிரி யர்கள் மூவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலிஸ் அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் ப்ரெஹ்மே ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு முன்னி லையாகும்படி நேற்று உத்தர விடப்பட்டிருந்தது.

சென்னை ஐஐடியில் கேரள மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப்் என்ற மாணவி எம்.ஏ. முதலாமாண்டு படித்துவந்தார்.

ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியவர், கடந்த 8ஆம் தேதி விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து போலிசாரின் விசாரணையின்போது மாணவியின் கைபேசி 'நோட்ஸ்' பகுதியில் அவர் உயிரை விடுவதற்கான காரணம் குறித்து குறிப்பெழுதி இருந்தார்.

ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என அதில் எழுதி இருந்தது. மேலும் ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் ப்ரெஹ்மே ஆகிய பேராசிரியர்களின் பெயரும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப்் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் முழு விசாரணை நடத்தக் கோரியும் கேரள முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். மனுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழக முதல்வரும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.