மதுரை ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.7½ லட்சம் கள்ளநோட்டுகள்

மதுரை ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.7½ லட்சம் கள்ளநோட்டுகள்

1 mins read
fe549033-62cd-4b9c-a818-9aef70c0ce83
கூகல் வரைபடம். -

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.7½ லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைக் கைப்பற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை ரயில் நிலையத்துக்கு நேற்றுகாலை குடிநீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு பூபதி, 36, என்பவர் லாரியை ஓட்டி வந்தார். ரயில் நிலைய நுழைவு வாசல் முன்பு லாரி வந்தபோது அவ்வழியாக வந்த ஒருவர் மஞ்சள் துணிப் பையை லாரி மீது வீசிவிட்டு தப்பி ஓடினார். பூபதி லாரியை நிறுத்திவிட்டு பையை எடுத்துப் பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.

அந்த பையை போலிசார் சோதனை செய்தபோது ரூ.2,000 நோட்டுகளாக 381 தாள்கள் இருந்தன. இவை அனைத்தும் கள்ள நோட்டு கள் என்பதும் பெரும்பாலா னவை ஜெராக்ஸ் தாள்கள் என்றும் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்