பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

1 mins read
c1401f44-eebb-40cb-a4b8-d785257c9f5c
தன்னையும் தன் கணவரையும் கொலைசெய்ய முயற்சி செய்வதாக தன் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேறு சாதியில் காதல் திருமணம் செய்துகொண்ட சுருதி தன் கணவர் விஜயனுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.  படம்: ஊடகம் -

திண்டுக்கல்: காதல் திருமணம் செய்ததால் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த தன்னையும் தன் கணவரையும் கொலைசெய்ய முயற்சி செய்வதாக தன் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் ஒருவர் கணவருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

மனுவில், "தன்னை தனது காதல் கணவருடன் வாழவிடாமல் தனது பெற்றோரும் உறவினர்களும் தொடர்ந்து மிரட்டி வருவதால் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே தனது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம், வேலுச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகள் சுருதியும் திண் டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை யைச் சேர்ந்த சோலை மலை என்ப வரின் மகன் விஜயன் என்பவரும் கடந்த ஆண்டு காதலித்து திரு மணம் செய்துகொண்டனர்.

சுருதியின் பெற்றோர் விஜயன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து சுருதியை அழைத்துவந்து கடந்த ஒரு வருடமாக வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இதையடுத்து கடந்த 8 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் இருந்து தப்பி வந்த சுருதி கணவரிடம் தஞ்சமடைந்தார்.