ரூ.2,000 கள்ளநோட்டில் இனிப்புப் பதார்த்தம் வாங்கிய இளைஞர் கைது

ரூ.2,000 கள்ளநோட்டில் இனிப்புப் பதார்த்தம் வாங்கிய இளைஞர் கைது

1 mins read

அயனாவரம்: சென்னை அயனாவரத்தில் இனிப்புக்கடை ஒன்றில் ரூ.2,000க்கு இனிப்புப் பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலிசார் கைது செய்தனர். ஏழுமலை என்ற அந்த இளைஞர் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து இனிப்புப் பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு வேகமாக ஓடிய நிலையில், சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அருணகிரி அவரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஏழுமலையிடம் இருந்த மேலும் ஆறு 2,000 ரூபாய் கள்ளநோட்டு்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கள்ளநோட்டுகளைக் கொடுத்த சதீஸ் என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.