'காதலி என்னை உதாசீனம் செய்ததால் கத்தியால் குத்தினேன்'

'காதலி என்னை உதாசீனம் செய்ததால் கத்தியால் குத்தினேன்'

1 mins read

சிதம்பரம்: சிதம்பரத்தில் பட்டப்பகலில் வீடுபுகுந்து காதலியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். வடமூர் என்ற இடத்தில் காதலி தனலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்த சக்திவேல் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடி உள்ளார். இதில் படுகாயமடைந்த தனலட்சுமி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கைதான சக்திவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில், "அர்த்தமற்ற காரணங்களைக் கூறி என்னைப் புறக்கணித்ததால் தனலட்சுமியை கொலை செய்ய முயன்றேன்," என்றார்.