திருச்சி: விருப்ப ஓய்வுபெற்ற பெண் போலிஸ் ஒருவர் திமுக சார்பில் திருச்சி மேயர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். திருச்சி மேயர் பதவிக்கு போட்டியிட திமுக முன்னாள் அமைச்சர் நேருவிடம் செல்வராணி விருப்ப மனு அளித்துள்ளார். செல்வராணி ஆதரவாளர்கள் கூறுகையில், "ஸ்டாலினிடம் செல்வராணிக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளது. தலைமையில் இருந்து சமிக்ஞை கிடைத்ததால் மேயர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார். அவருக்கு 'சீட்' கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது," என்றனர்.
மேயர் பதவிக்கு முன்னாள் பெண் போலிஸ் விருப்ப மனு
1 mins read

