மனாலியில் தேனிலவு கொண்டாடிய சென்னை தம்பதி; கணவரின் உயிரைப் பறித்த சாகச விளையாட்டு

திருமணமாகி ஒரு வாரமே ஆகியிருந்த நிலையில் தேனிலவுக்காக கணவருடன் சிம்லாவில் உள்ள மனாலிக்குச் சென்ற பிரீத்தி, கணவரின் சிதைந்துபோன சடலத்துடன் ஊர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அமைந்தகரை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 27 வயது அரவிந்துக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

தேனிலவுக்காக இவர்கள் இமாசலபிரதேச மாநிலம் மனாலிக்கு சென்றனர். அங்குள்ள சுற்றுலாத் தளங்களைப் பார்த்து மகிழ்ந்த அவர்கள் அங்குள்ள ‘டோபி’ என்ற இடத்துக்குச் சென்றனர்.

‘பாராகிளைடர்’ எனும் சாகச நடவடிக்கை டோபியில் மிகவும் பிரபலமானது.

அங்கு சென்றபோது, பாராகிளைடரில் பறக்க விரும்பிய அரவிந்த், பாராகிளைடர் விமானி ஹரு ராம் என்பவருடன் பறந்தார்.

அதை பிரீத்தி தரையில் இருந்து ஆரவாரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

வானில் பறந்த சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் அரவிந்த் கட்டப்பட்டிருந்த பாதுகாப்புப்பட்டை கழன்றுவிட்டதால், பாராகிளைடரில் இருந்து கீழே பள்ளத்தில் விழுந்தார் அவர்.

இதில் படுகாயம் அடைந்த அவர், அந்த இடத்திலேயே இறந்தார்.

அரவிந்த் கீழே விழுந்ததையடுத்து அவசரமாகக் கீழே இறங்க முயன்ற விமானி ஹரு ராமும் காயம் அடைந்தார். அவர் உடனே குல்லு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரவிந்த் உடலை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக குல்லு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கணவரின் உடலைப் பார்த்து பிரீத்தி கதறி அழுதது அங்கிருந்தோரைக் கலக்கத்தில் ஆழ்த்தியது.

முதல்கட்ட விசாரணையில் பாதுகாப்புப்பட்டையைச் சரியாகக் கட்டாததே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

பிரீத்தி அளித்த புகாரின் பேரில், 336 (உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் அல்லது மற்றவர்களின் தனிப்பாதுகாப்பு), 304 (கொலைக்கு உட்படாத உயிரிழப்பை ஏற்படுத்தும் குற்றம்) ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த இடத்தில் கடந்த மே மாதம் 18-ந் தேதி இங்கு பஞ்சாப் மாநிலம் மொகாலியை சேர்ந்த அமந்தீப் சிங் சோதி என்ற 23 வயது இளையர் பாராகிளைடர் சாகசத்தின்போது மலையில் மோதியதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!