சென்னை: ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போல் தமிழக அரசியல் தலைவர்கள் முதலைக்கண்ணீர் வடிப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் சகோதரர் கோத்பய ராஜபக்சே வெற்றி பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல், தமிழக அரசியல் தலைவர்களைக் கடுமையாகக் குறைகூறி அறிக்கை வெளியிட்டார்.
“2009ல் போர் முடிந்ததும் திமுகவின் நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை வந்து ராஜபக்சேவுடன் சிநேகமாகப் பழகினர்.
“அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது,” என்று நாமல் தெரிவித்துள்ளார்.