உசிலம்பட்டியில் கடையடைப்புப் போராட்டம்

மதுரை: நிதி பற்றாக்குறையால் பாதியில் கைவிடப்பட்ட 58 கிராம கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக்கோரி உசிலம்பட்டியில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டப் பணிகள் 18 ஆண்டுகளாக நிறைவுபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர். கடையடைப்புப் போராட்டத்தால் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.