சென்னை: சொத்துத் தகராறு காரணமாக மாமியாரை கடத்திய மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் பத்மினி. இவருக்கும் இவரது மருமகள் மேனகாவிற்கும் சில நாட்களாகச் சொத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பத்மினியை காணவில்லை என அவரது உறவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது. இதில், மேனகா, தனது மாமியாரை கடத்தி உறவினர் வீட்டில் வைத்து சித்திரவதை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, பத்மினியை மீட்ட காவல்துறையினர், மேனகாவைக் கைது செய்தனர்.
மாமியாரை கடத்திய மருமகள் கைது
1 mins read

