அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் முன்னிலை

அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் முன்னிலை

1 mins read

திண்டிவனம்: சிலை கடத்தல்கள் தொடர்பாகக் கடந்த 2019 ஜூலையில் நக்கீரன் இதழில் செய்தி ஒன்று வெளியானது. அந்தச் செய்தி, தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார். மேலும், உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்தியை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், தாமோதரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 499, 500, 501 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி திண்டிவனம் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நீதிமன்றத்தில் முன்னிலையாகக் குற்றவியல் நடுவர் நளினிதேவி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார். ஆனால் குற்றவியல் நடுவர் நளினிதேவி விடுமுறையில் உள்ளதால் வழக்கு டிச.10 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.