சென்னை: தேனி, நாகை, கடலூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை பெய்துவருகிறது.
இந்த நான்கு மாவட்டங்களில் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட் டத்தில் கனமழை நீடித்து வருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடு முறை விடப்படுவதாக நாகப்பட்டின மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நேற்று அறிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தெற்கு மாவட்டங்களான திருநெல்வேலி, ராமேஸ்வரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை மையம் கூறியிருந்த நிலையில் இந்த கனமழை நீடித்து வருகிறது.
இந்நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர், சுற்றுவட்டார இடங்க களில் மழை பெய்து வருவதுடன் விருத்தாச்சலம், திட்டக்குடி, நெய்வேலி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.