வடபழனி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நண்டு பண்ணை அமைத்து ‘சதுரங்க வேட்டை’ பட பாணியில் பல கோடி ரூபாய் பணமோசடி செய்தவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போலிசில் புகார் அளித்தனர்.
சென்னை வடபழனியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 10 மாதத்தில் இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படும் என்று ஆசைவார்த்தை கூறப்பட்டுள்ளது. இதை நம்பி ஏராளமான மக்கள் ரூ.25 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனம் சொன்னபடி பணத்தைத் திருப்பித் தராமல் அலுவலகத்தையும் காலி செய்துள்ளது.