திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஐயர்மடம் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு காளையை வளர்த்து வந்தார்.
பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் என்பதால் அந்தப் போட்டியில் பங்கேற்பதற்குத் தோதாக தனது காளைக்கு அவர் பயிற்சி அளித்து வந்தார்.
இந்நிலையில் அவர் பயிற்சி அளித்துக்கொண்டிருந்த போது திடீரென காளை முட்டித்தள்ளியதில் அவர் வயிற்றில் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இக்காட்சிகள் வலைத்தளங்களில் விரைந்து பரவுகின்றன. படம்:ஊடகம்