வேலூர்: வேலூர் மாநகராட்சி யில் கடிதப் போக்குவரத்து தாமதமாவதைத் தடுப்பதற்காக ‘மின்னிலக்க அஞ்சல் பெட்டிகள்’ திட்டம் நடப்புக்கு வந்துள்ளது.
மின்னிலக்கப் பெட்டியின் உள்பக்கம் ‘பார் கோடு’ உள்ளது. அதைப் பார்க்க ஒவ்வொரு தபால்காரருக்கும் அஞ்சல் துறை சார்பில் கைபேசி வழங்கப்பட்டுள்ளது.
தபால்காரர்கள் அப்போதைக்கு அப்போது பட்டுவாடா விவரங்களைக் கைபேசி மூலம் செயலியில் பதிவேற்றி தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் தாமதம் தவிர்க்கப்படும்.