‘தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் விரைவில் தமிழ் மொழியில் அறிவிப்பு’

சென்னை: பயணிகளின் வசதிக்கு ஏற்ப அவர்களுக்கு பரிச்சயமான மொழிகளில் விமானங்களில் அறிவிப்புகளைக் கூறாமல் புரியாத மொழிகளில் கூறுவதால் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது.

இதில் மாற்றம் தேவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒருசில தினங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார்.

வைகோவின் கோரிக்கை விரை வில் அமல்படுத்தப்படும் என நேற்று அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இயங்கி வரும் விமானங்களில் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வருகின்றன. ஆனால் இவ்விரு மொழிகளும் தெரியாத விமானப் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள் புரிவதில்லை.

ஆகையால் இந்திய நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்களில் அந்தந்த மாநில மொழிகளில் அறிவிப்புகளை வெளியிட நாடாளு மன்றத்தில் வைகோ கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக தமிழகத்திற்குள்ளேயே பறக்கும் விமானங்களின் அறி விப்புகள் தமிழ்மொழியில் வெளி யாகவேண்டும் எனவும் அவர் கூறி னார். இதற்கு அமைச்சர்கள் மத்தி யில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

அவைத் தலைவர் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத் துறை அமைச்சரைப் பார்த்து இந்த நியாயமான கோரிக்கையை விமா னப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு உடனே தெரிவித்து செயல்படுத்தச் சொல்லவும் என்றார்.

இந்நிலையில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “தமிழகத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங் களிலும் தமிழில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளோம்.

“அண்மையில் சென்னைக்கு வந்த பிரதமர் மோடியும் இதுகுறித்து வாக்குறுதி அளித்தார். ஆக இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப் படும்,” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!