கோவை: விபத்துகளுக்கு காரணமாகும் வகையில் கோவையில் கண்கூசும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற 3,275 வாகனங்களுக்கு கடந்த 10 மாதங்களில் போக்குவரத்து துறை மூலமாக ரூ.3.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த 884 சாலை விபத்துகளில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் பலவற்றுக்கு கண்கூசும் முகப்பு விளக்கு களும் காரணியாக இருந்துள்ளன. கனரக வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்வதால் வாகனத்தை முந்திச் செல்வதும் எதிர்திசையில் வரும் வாகனத்தின் தூரத்தைக் கணிப்பதும் ஓட்டுநர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஒரே வாகனத்தில் கூடுதல் முகப்பு விளக்குகளையும் பொருத்திக்கொள்கின்றனர். எனவே போக்குவரத்து அதி காரிகள் கண்கூசும் விளக்குகளை எரியவிட்டபடி செல் லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.