திருச்சி: தாய்க்கு கோயில் கட்டிய ராஜராஜசோழன் என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திருவெறும்பூரில் நின்றுகொண்டு இருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வழக்கறிஞர் ராஜராஜ சோழன் உயிரிழந்தார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஜராஜ சோழனின் மகன் சேரலாதனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜராஜசோழன் கடந்த ஆண்டு உயிரிழந்த தனது தாய் அமுதாவுக்கு கோவில் கட்டியதுடன், சிலை திறப்பு விழாவை விமரி்சையாகவும் நடத்தி இருந்தார்.