சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை

1 mins read

ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை வித்துள்ளனர். நேற்றைய பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் காத்திருந்த நிலையில் அங்கு திடீரென மழை பெய்ததால் வனத்துறையினர் பக்கதர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் ஏராளமான பக்தர்கள் அடிவாரத்திலேயே ஏமாற்றத்துடன் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர்.