நெய்வேலி: பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவமும் அதையொட்டி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதும் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைதாகி உள்ளனர்.
கடலூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வடலூரில் உள்ள காய்கறிச் சந்தைக்குச் சென்று தேவையானவற்றை வாங்கிக் கொண்டு தனக்குத் தெரிந்த சுரேந்தர் என்பவருடன் வீடு திரும்பி உள்ளார்.
நெய்வேலி சாம்பல் ஏரி பகுதி அருகே வந்தபோது இருவரையும் மதுபோதையில் வழி மறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல், சுரேந்தரை சரமாரியாகத் தாக்கி விரட்டியது. பின்னர் 5 பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். அச்சமயம் நண்பர்களுக்குள் தகராறு ஏற்படவே பிரகாஷ் என்ற இளைஞரை மற்ற நால்வரும் சேர்ந்து அடித்துக் கொன்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நெய்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.